அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: எண்ணெய்வித்துக்கள்

எண்ணெய் வித்துக்கள் - பதப்படுத்துதல்
இந்தியாவில் எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, கடுகு, குசம்பூ ஆகியவை பொதுவாக உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய் பிரித்தெடுத்தல்
எண்ணெய் வித்துக்கள் சுத்தம் செய்த மேல் தோலெடுத்து இயந்திர அழுத்துவான், திருகு அழுத்துவான் மூலம் அழுத்தப்பட்டு பின்பு கரைப்பான்களில் நேரடியாக கரைத்து பிரிக்கப்படுகிறது.

தனித்தெடுக்கப்பட்ட புரதம்
கரைப்பானில் கரைத்த பிறகு சோடியம் ஹைட்ராக்சைடு நீக்கப்பட்ட அமில காரத்தன்மை  8 அடைந்த புரதம் வடிகட்டி பிரிக்கப்படுகிறது. நீரினால் கழுவிய பிறகு மற்ற தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

நிலக்கடலை
நிலக்கடலை மற்றப் பயிறு வகைகளில் உள்ள அளவு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. ஆனால் கொழுப்பு சத்து மிகுந்து காணப்படுகிறது. நிலக்கடலை வேகவைத்து மற்றும் வறுத்து, உட்கொள்ளப்படுகிறது. முதன்மைப் பொருளாக எண்ணெய் பிரித்து சமையல் எண்ணெயாகவும், மற்றும் தாவர எண்ணெய், சோப் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் எடுத்த பிறகு மிஞ்சியுள்ள பொருளானது சுத்திகரிக்கப்பட்டு ஊட்டச்சத்து கலவைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடலை எண்ணெயில் அமைந்துள்ள புரதமானது அராசின் (Arachin) மற்றம் கொரைட்சின் ஆகும். இதில் குறைந்துள்ள அமினோ அமிலங்களானது லைசின் மற்றும் மத்தியோனின் ஆகும்.

சூரியகாந்தி எண்ணெய் பிரித்தெடுத்தல்
இதில் இரண்டு முறைகளும் கரைசலில் கரைத்துப் பிரித்தெடுப்பது மற்றும் இயங்கி உதவியுடன் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. திருகு அழுத்துவான் மூலம் பிரித்தெடுப்பதில் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை எண்ணெய் வித்துக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. திருக அழுத்துவானில் எண்ணெய்ப் பிரித்தெடுக்கும் முறையில்

  1. விதையானது, சுத்தம் செய்து உடைப்பதனால் நார்ச்சத்து குறைந்து எண்ணெய் அளவு மற்றும் புரதம் அதிகமாகிறது.
  2. உடைத்த வித்துக்களை உருளை அரைவையினுள் செலுத்தினால் அவை நசுக்கப்பட்டு எண்ணெய் வெளியிடும் திறன் அதிகரிக்கப்படும்.
  3. உருட்டி தட்டையாக்கப்பட்ட வித்துக்களை சூடு செய்யும் போது எண்ணெய் வெளியாவது அதிகரிக்கின்றது.
  4. எண்ணெயானது வேகவைத்த மற்றும் தட்டையாக்கப்பட்ட வித்துக்களிலிருந்து எண்ணெய் பிரித்து வெளியேற்றும் இயந்திரம் (Expeller) வெளியேற்றப்படுகிறது. இந்த எண்ணெய் வடிகட்டி விதையின் பாகங்கள் பிரிக்கப்படுகிறது.
  5. விதையின் சக்கைகள் தனியாகப் பிரித்து மூட்டைகளாக்கப்படுகிறது.
  6. குரூடாயில் ஆனது சுத்திகரிக்கப்பட்டு உண்ணக்கூடிய வகையில் சமையல் எண்ணெயாக மாற்றப்படுகிறது.

தொழில்நுட்பம் கிடைக்குமிடம்

  • அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.
  • மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015